Monday, February 18, 2013

அற்புத மூலிகை அறுகம்புல்


"நலமுடன் வாழ"

அற்புத மூலிகை அறுகம்புல்

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

விவசாய தகவல்கள் - பண்ணைக் குட்டைகள்!

விவசாய தகவல்கள் - பண்ணைக் குட்டைகள்!
----------------------------------------------------------------------------

மழை குறைந்துவிட்டதால் விவசாயிகளின் துயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதனால் செலவு அதிகமாகிறது. செலவு செய்ய இயலாதவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலையில் பெய்யும் குறைந்த மழையையும் வீணாக்காமல் சேமித்து வைக்க ஒரு சிறந்த முறையாக பண்ணை குட்டைகள் இருக்கின்றன. இம்முறையை சிறப்பாக செய்து பயன்பெற்று வரும் ஒருவர் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்...

தெரிந்து கொள்வோம் நண்பர்களே !

மழை இல்லா க் காலத்திலும், பண்ணைக் குட்டைகள் மூலம், முழுமையாக விவசாயம் செய்யும், மைக்கேல்: ராமநாதபுரம், கடலாடியிலுள்ள சவேரியார்பட்டினம் தான், சொந்த ஊர். கிராமம் முழுவதும் விவசாயத்தையும், மழையையும் நம்பியே, வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பருவ மழை சரியாக பெய்யாமல், பயிர்கள் கருகி, எங்களின் வாழ்க்கை பலமுறை கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த, 2000ம் ஆண்டு, "தானம்' என்ற தன்னார்வ அறக்கட்டளை அமைப்பு, பருவமழை பொய்த்து, எங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகாமல் இருக்க, "பண்ணைக் குட்டைகள்' பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, நபார்டு வங்கி மூலம் பண உதவி செய்து, பண்ணைக் குட்டைகள் அமைக்க வழிகாட்டினர். பண்ணைக் குட்டைகள் என்பது, இரண்டாம் தர நீர்த்தேக்கம். மழைக் காலங்களில், மழை நீரை வயல்வெளியில் அதிகம் சேமிக்க முடியாது. ஆனால், நம் தேவைக்கேற்ப, குட்டை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மழை நீர் வயல்களில் தேங்கி, பயிரை நாசப்படுத்தாமல், தானாகவே குட்டைகளில் வழிந்து, நீர் வீணாகாமல் சேமிக்கப்படும்.

தற்போது, நீர் தேங்கும் கால்வாய் மற்றும் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், இத்திட்டம் நல்ல பயனளிக்கும். இரண்டரை ஏக்கர் நிலத்தில், 1,000 முதல், 1,500 க.மீ., நீர் தேங்க, 30 மீ., நீளம், 30 மீ., அகலம், 1.5 மீ., ஆழம் கொண்டதாக, மிக தாழ்வான பகுதியில் அமைத்தேன். தேவைக்கேற்ப, ஆழத்தை அதிகரிக்கலாம். இதை அமைக்க, ஒரு கன மீட்டருக்கு, 35 ரூபாய் முதல், 38 ரூபாய் வரை செலவாகும்.

பண்ணைக் குட்டைகள் வந்த பிறகு, நீரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பயிர்கள் கருகும் நிலையில்லை. ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை நிகர வருமானம் கிடைக்கிறது. மழை நன்றாகப் பெய்யும் காலங்களில், பயிர்களுக்கு நீர் தேவைப்படாது. எனவே, அக்காலங்களில், பண்ணைக் குட்டையில் மீன்களை வளர்த்தும் லாபம் ஈட்டலாம். தற்போது எங்கள் கிராமத்திலேயே, 360 பண்ணைக் குட்டைகள் உள்ளன. தொடர்புக்கு: 0452-2601673.

வாழ்த்துவோம் இவரை...இம்முறையினை நமக்கு தெரிந்த விவசாயிகளிடம் கொண்டு செல்வோம்.
தகவல் உதவி : தினமலர்

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்


Photo: ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.
ரீபைண்ட் ஆயில்:
செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.
வெண்ணெய், நெய், வனஸ்பதி:
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
பாலிஷ் அரிசி:
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறி, பழங்கள்:
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.
பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.
கோலா, காபி, டீ:
இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.
சர்க்கரை:
சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்

நன்றி :- கதம்பம் திரு .ஆரோக்கியம்

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு:
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து 

கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்:
செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி:
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்:
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:
இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை:
சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்

நன்றி :- கதம்பம் திரு .ஆரோக்கியம்

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை!மரத்தில் அமர்ந்து குழல் ஊதும் மேய்ப்பன், சுற்றிலும் மேய்ச்சல் மாடுகள்... இப்படித்தான் இருந்தது கிராம வாழ்க்கை. இப்போதோ எல்லாமே தலைகீழ்.

மேய்ச்சலுக்கு இடமில்லை; மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது நிரந்தர புலம்பலாக மாறிவிட்டது. விளைவு? கிராமங்களிலும் பால் பாக்கெட் வாங்குவதும், இயற்கை உரத்துக்குப் பதிலாக யூரியாவை வாங்கி வயலுக்குப் போடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

விவசாயிகளின் இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் புதிய பண்ணை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் இளைஞர் பி.தாமோதரன். விஞ்ஞான முறையிலான அவருடைய பண்ணை முறையைப் பற்றிக் கேட்டோம்.

கால்நடை வளர்ப்பு பற்றிய இந்த திட்டத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் மக்கள் தங்கள் தேவைக்கான பாலையும் இறைச்சியையும் கடையில் வாங்கிக் கொள்வதற்குத் தயாராகிவிடுகிறார்கள். கால்நடைகளைப் பராமரிக்க நிறைய நேரமும் உழைப்பும் செலவாகிறது என்பது கிராம மக்களின் கருத்தாக இருக்கிறது.

மேய்க்க வேண்டியில்லாத, விஞ்ஞான பூர்வமான வளர்ப்பு திட்டத்தினால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று தோன்றியது. கால்நடைகளை ஒரே இடத்தில் வைத்து வளர்ப்பதும் அவற்றுக்கான உணவைப் பக்கத்திலேயே பயிர் செய்து கொள்வதும் போதுமானதாகத் தோன்றவே பரீட்சார்த்த முறையில் இதைத் தொடங்கினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து இதற்கு வழிகாட்டி வருகிறோம்.

வழிகாட்டுதல் என்றால் எந்தவிதத்தில்?

கால்நடைகளுக்கான கூடாரம் எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் அதை அமைத்துக் கொடுப்பதற்கும் உதவுகிறோம். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க மாதந்தோறும் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறோம். நான் அடிப்படையில் பி.பார்ம் படித்தவன்.

ஆதலால் அதற்கான மருத்துவக் குழுவையும் ஏற்படுத்தினேன். இதற்காக நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. கூடாரம் அமைத்து கறவை பசுக்களையும் ஆடுகளையும் வாங்கித் தந்து அவற்றுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் செய்வதற்கு ஈடாக அவர்கள் வளர்க்கும் கால் நடைகளின் பால், இறைச்சி ஆகியவற்றின் விற்பனையில் இரண்டு சதவீதத்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம்.

இந்த ஆறு ஆண்டுகளில் புதுவை, விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த முறையில் கால்நடைகளை வளர்த்துப் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இதுவரை 2500 பேர் பண்ணை அமைக்க மனு செய்திருக்கிறார்கள்.

ஏழை விவசாயிகள் முதலீடு செய்வதற்கு உதவுகிறீர்களா?

நிச்சயமாக. தொடர்ச்சியான என் ஈடுபாட்டின் விளைவாக பல்வேறு வங்கிகளில் கடனுடதவி பெற்றுத் தர ஒப்பந்தங்கள் ஏற்படுத்தினோம். விவசாயி, வங்கி, எங்களுடைய அமைப்பான பெஸ்ட் பவுண்டேஷன் மூன்றும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஏழை தலித் மக்கள், மிகக் குறைந்த நிலம் வைத்திருப்போர்தான் இதில் மிகுதியாக ஆர்வம்காட்டி வருகிறார்கள்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக வங்கிகள் வழங்குகின்றன. அதை ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும். மேலும் இதில் முதல் ஆண்டு கால்நடை வளர்ப்புக் காலமாகக் கருத்தில் கொண்டு அந்த ஆண்டில் கடனை திருப்பி அடைக்க வேண்டியதில்லை என்றும் இந்த ஒப்பந்தத்தில் அறிவித்திருக்கிறோம்.

உங்கள் பெஸ்ட் பவுண்டேஷன் அமைப்பைப் பற்றி?

இது ஒரு சேவை அமைப்பு. விவசாயிகளின் கால்நடை உற்பத்தியில் இருந்து நாங்கள் பெறும் இரண்டு சதவீத கட்டணம்கூட விவசாயிகளுக்கு உதவுவதற்காகத்தான். சில தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு கால்நடை மருத்துவத்துக்கான மருந்துகளைத் தருகின்றன. இதில் ட்ரஸ்டியாக செயல்படும் ஃபிலிப்ஸ், ஷீலா ரஞ்சனி ஆகியோரும் வேறுபணிகளில் இருப்பவர்கள்தான். இதைச் சேவையாகத்தான் செய்துவருகிறோம்.

எந்த மாதிரியான தீவனங்களைக் கால்நடைகளுக்குக் கொடுக்கிறீர்கள்?

குதிரை மசால், முயல் மசால், கோ -4, அகத்திக் கீரை போன்ற இயற்கைத் தீவனங்களை, நாம் பண்ணை அமைத்திருக்கும் இடத்தைச் சுற்றி பயிர் செய்து கொண்டால் போதும்.

அவற்றைப் பறித்துவந்து தினமும் காலையில் ஓர் அரை மணி நேரமும் மாலையில் ஓர் அரை மணிநேரமும் இதற்குச் செலவிட வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை வெயிலில் கால் நடைகளைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இந்த முறையின் மூலம் அவற்றுக்குத் தேவையான தரமான தீவனம் கிடைப்பதும் சுகாதாரமான முறையில் வளர்க்க முடிவும் சாத்தியமாகிறது.

இயற்கைச் சீற்றங்களால் கால்நடைகளுக்கோ, கூடாரங்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால்..?

வங்கியின் மூலம் பண உதவி பெறும்போதே கால்நடை, கூடாரம், அதை வளர்க்கும் விவசாயி மூவருக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. இதனால் இது நூறு சதவீதம் பாதுகாப்பான பண்ணை முறையாகும்.

பெரிய அளவில் இந்தப் பண்ணையை உருவாக்க நினைப்பவர்களுக்கு?

சொந்தப் பணத்தில் செய்பவர்களுக்கும் நாங்கள் பண்ணை அமைக்க உதவுகிறோம். ஐந்து ஏக்கர் வரை செய்பவர்களுக்கு வங்கி மூலமாக பணம் வாங்கித் தருகிறோம்.

படித்த, வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிலம் இருக்கும் விவசாயிகளும்கூட விவசாயத்துறையில் போதிய விஞ்ஞான முன்னேற்றங்களைக் கொண்டுவராததால் பல நூறு ஆண்டுகளாக செய்துவரும் அதே முறையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு போராடி, சோர்ந்து வேறு வேலைகளுக்குப் போக எண்ணுகிறார்கள்.

இந்தப் பண்ணைமுறை அத்தகைய எண்ணத்தை மாற்றுகிறது. அரசு வேலைதான் வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு சுயத் தொழிலில் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம்.

ஒரு ஏக்கரில் எத்தனை பசுக்களும் ஆடுகளும் வளர்க்கலாம்?

இருபது ஆடுகளும் இரண்டு பசுக்களும் வளர்ப்பது ஏற்றது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இவற்றை வளர்ப்பதற்கு ஒரு மனிதர் மட்டும் பகுதி நேரம் உழைத்தாலே போதும் என்பதால் மனித உழைப்பு மிகவும் குறைவு.

இந்த முறையில் கால்நடைகளை வளர்ப்பதால் வேறு நன்மைகள் ஏதேனும் உண்டா?

வேலை நேரம் மிச்சம் என்பதோடு, சுகாதாரமான இறைச்சியும் பாலும் கிடைக்கிறது. இவற்றையெல்லாம்விட முக்கியமாக இயற்கை உரம் கிடைக்கிறது.

விவசாயிகளிடம் இருந்து இதற்குக் கிடைக்கும் வரவேற்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் விவசாய நிலங்களில் ஆடுகளை மந்தை மடக்கி வைத்து இதனால் கிடைக்கும் கழிவுகளில் விவசாயம் செய்யும்போது அமோக விளைச்சலும் பயிருக்குப் போதிய நோய் தாங்கும் சக்தியும் கிடைத்தது. இந்தப் பண்ணை திட்டத்தின் மூலம் அதை மீண்டும் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

நன்றி :- தினமணி

முருங்கை

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். 

இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். 

முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது

இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம்.

வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

மாடியில் கீரையை வளர்த்து உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.

வாழ்த்துக்கள்!!

by Vincent
Pasumai Vidiyal
Source :http://maravalam.blogspot.in/

இயற்கைக்கு மாறுவது எப்படி?

இயற்கைக்கு மாறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த பொருட்களில் எவ்வித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட மாட்டாது. இயற்கையாக நாம் கொடுப்பது மண்ணுக்கும், பயிர் வளர்வதற்கான சத்துக்களும் மட்டுமே. விளைச்சலில் சில இயற்கை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மட்டுப்படுத்தப்படும் அவ்வளவே.

ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நண்பர்கள் அந்த பொருட்களில் சுத்தமாக பூச்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். எனில் நாம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பூச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம். அவைகளை புடைத்து பூச்சியை வெளியேற்றலாம். அல்லது அரிசி, பருப்பு போன்றவற்றை தண்ணீரில் போட்டால், தானாகவே பூச்சிகள், வண்டுகள் மேலே வந்துவிடும். அவற்றை எடுத்தப் போட்டுவிட்டு பொருட்களை அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. நாம் சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பூசிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எனில் இயற்கை வழி விளைந்த பொருட்கள் என்பதற்கு என்ன பொருள்?

தவிர, வண்டுகளும், பூச்சிகளும் இருக்கும் உணவுப் பொருட்களே நாம் உண்ண தகுந்த பொருள். அவைகள்தான் அது உண்ணத்தகுந்த பொருள் என்று நமது முன்னோருக்கு உணர்த்தி இருக்கும். வண்டுகள் துளைக்காத மாம்பழத்தை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு கேடு. அதே வண்டு துளைத்த மாம்பழம், சுவையாகவும் இருக்கும். தவிர உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கும். எந்த உயிரும் வாழவே விரும்பாத ஒரு பொருளைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன வகை? நாம் இயற்கையோடு மாற வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொள்வதோடு, அப்படி மாறுவதால் ஏற்படும் சில கூடுதலான வேலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்தது போன்று, எல்லாப் பொருட்களையும், புடைத்து அல்லது வண்டுகளை பொருக்கி எடுத்துப் போட்டுவிட்டு பயன்படுத்தினால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம்.

இந்த ஐந்து நிமிட வேலைக்கு பயந்து, பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி நாம் ஏன் நம்மையும், நமது சந்ததிகளையும் அழிக்கும் வேலையை செய்யவேண்டும். நாம் வாழப் பிறந்தவர்கள்... அது இயற்கையோடு என்றால் பெருமிதம் கொள்வோம்

Device for farmers

மண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்!செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள்.

மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது: எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அதற்கேற்ப ஈரோடு காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும் காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத் திட்டமிட்டோம். இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம்.

காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும். உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.

ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது. உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50 பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4 ஆயிரம். மொத்தம் ரூ. 26,500. இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500. இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக, 12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

மண் புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க, இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப் போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்.

சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும்.

மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?

செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம். விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.

மூலதன செலவு என்ன?

கட்டமைப்புகள்:
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.
10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி. அதைச்சுற்றி இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.

உற்பத்திச் செலவு:

அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500.
காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500.
மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம்.
5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் & ரூ. 5 ஆயிரம்
பராமரிப்பு கூலி ரூ. 500.
இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500
மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம்.
இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது.

தயாரிப்பது எப்படி?

மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன் காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.

இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.

நண்பேன்டா....

விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.

‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம் எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.
மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.

விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.

மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர்.

சந்தை வாய்ப்பு:

இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல், மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம் தேவைப்படுகிறது.

வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும், தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.

நன்றி :- தமிழ் முரசு