Monday, February 18, 2013

முருங்கை

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். 

இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். 

முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது

இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம்.

வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

மாடியில் கீரையை வளர்த்து உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.

வாழ்த்துக்கள்!!

by Vincent
Pasumai Vidiyal
Source :http://maravalam.blogspot.in/

இயற்கைக்கு மாறுவது எப்படி?

இயற்கைக்கு மாறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த பொருட்களில் எவ்வித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட மாட்டாது. இயற்கையாக நாம் கொடுப்பது மண்ணுக்கும், பயிர் வளர்வதற்கான சத்துக்களும் மட்டுமே. விளைச்சலில் சில இயற்கை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மட்டுப்படுத்தப்படும் அவ்வளவே.

ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நண்பர்கள் அந்த பொருட்களில் சுத்தமாக பூச்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். எனில் நாம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பூச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம். அவைகளை புடைத்து பூச்சியை வெளியேற்றலாம். அல்லது அரிசி, பருப்பு போன்றவற்றை தண்ணீரில் போட்டால், தானாகவே பூச்சிகள், வண்டுகள் மேலே வந்துவிடும். அவற்றை எடுத்தப் போட்டுவிட்டு பொருட்களை அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. நாம் சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பூசிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எனில் இயற்கை வழி விளைந்த பொருட்கள் என்பதற்கு என்ன பொருள்?

தவிர, வண்டுகளும், பூச்சிகளும் இருக்கும் உணவுப் பொருட்களே நாம் உண்ண தகுந்த பொருள். அவைகள்தான் அது உண்ணத்தகுந்த பொருள் என்று நமது முன்னோருக்கு உணர்த்தி இருக்கும். வண்டுகள் துளைக்காத மாம்பழத்தை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு கேடு. அதே வண்டு துளைத்த மாம்பழம், சுவையாகவும் இருக்கும். தவிர உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கும். எந்த உயிரும் வாழவே விரும்பாத ஒரு பொருளைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன வகை? நாம் இயற்கையோடு மாற வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொள்வதோடு, அப்படி மாறுவதால் ஏற்படும் சில கூடுதலான வேலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்தது போன்று, எல்லாப் பொருட்களையும், புடைத்து அல்லது வண்டுகளை பொருக்கி எடுத்துப் போட்டுவிட்டு பயன்படுத்தினால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம்.

இந்த ஐந்து நிமிட வேலைக்கு பயந்து, பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி நாம் ஏன் நம்மையும், நமது சந்ததிகளையும் அழிக்கும் வேலையை செய்யவேண்டும். நாம் வாழப் பிறந்தவர்கள்... அது இயற்கையோடு என்றால் பெருமிதம் கொள்வோம்

Device for farmers

மண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்!



செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள்.

மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது: எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அதற்கேற்ப ஈரோடு காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும் காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத் திட்டமிட்டோம். இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம்.

காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும். உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.

ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது. உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50 பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4 ஆயிரம். மொத்தம் ரூ. 26,500. இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500. இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக, 12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

மண் புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க, இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப் போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்.

சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும்.

மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?

செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம். விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.

மூலதன செலவு என்ன?

கட்டமைப்புகள்:
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.
10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி. அதைச்சுற்றி இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.

உற்பத்திச் செலவு:

அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500.
காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500.
மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம்.
5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் & ரூ. 5 ஆயிரம்
பராமரிப்பு கூலி ரூ. 500.
இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500
மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம்.
இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது.

தயாரிப்பது எப்படி?

மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன் காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.

இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.

நண்பேன்டா....

விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.

‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம் எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.
மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.

விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.

மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர்.

சந்தை வாய்ப்பு:

இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல், மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம் தேவைப்படுகிறது.

வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும், தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.

நன்றி :- தமிழ் முரசு

Wednesday, January 16, 2013

நம்மாழ்வார் - பச்சை புரட்சி










பஞ்சகாவியம் செய்முறை


தேவையான பொருள்கள்
 
மாட்டு சாணம்
கோமியம்
பசும்பால்
புளித்த தயிர்
நெய்
கருப்பட்டி
வாழை பழம்
இளநீர்

பயன்கள்

நம்மாழ்வார்  இதை உண்டு தனது மூக்கு கண்ணாடியை கழட்டி விட்டார்

நோய் தடுக்கும் !! நோய் தீர்க்கும் !!

பயிரில் சேர்க்க தண்ணீர் சேர்க்க வேண்டும் 

நஞ்சில்லா உணவை உற்பத்தி

முன்னோடி சாதனை விவசாயி :

திரு. K.V. செந்தில் குமார் ( கைபேசி : 97882 03694 )
( அடர் நடவு வாழை )

இராசாயன முறை விவசாய முறையால் பெரிதும் நஷ்டமடைந்தது ஒரு கால கட்டத்தில் இனி நாம் இயற்கை முறையை நாடி சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதை உணர்ந்த திரு. K.V. செந்தில் குமார் அவர்கள்
“ இயற்கை ஞானி நம்மாழ்வார் அவர்களின் எழுத்துக்களாலும் ( புத்தகங்களால் ), வானொலிகளிலும், தொலைகாட்சி பேட்டிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இயற்கை வழி விவசாய முறையை கையாண்டு இராசாயனத்தால் வளமிழந்த தன் நிலத்தை மீண்டும் உயிர்பித்ததுடன், அனைவருக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருகிறார்.

மேலும் உணவு சங்கிலியிலுள்ள அனைத்து உயிர்களும் தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை தொடர்ந்து அறிவுறித்திவரும் நம்மாழ்வார் அவர்களின் வாக்கை தன்னுடைய நிலத்தில் மெய்பித்தும் காட்டியுள்ளார்.

இன்றைய சூழலில் அனைவரும் இயற்கையை நோக்கிப் பயனிப்போமானால் விவசாயிகள் மட்டுமில்லாமல் அதை உண்போர்களும் மருத்துவமனை செல்லாமல் " உணவே மருந்து " என்கிற நிலையை அடைய முடியும் எனகிறார்.

இவர் தன்னுடைய நிலத்தில் கற்பூர வல்லி வாழையை அடர் நடவு முறையில் நட்டு நிறைவான இலாபத்தை விவசாயத்தின் மூலம் மட்டுமே ஈட்டுவருகிறார். மேலும் நெல்லிலும் ஒற்றை நாற்று நடவு முறையிலும் அசத்தி வருகிறார்.

மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயத் துறை அதிகாரிகளுக்கும் பாடம் நடத்தி சேவை செய்து வருகிறார். மேலும் அந்தப் பகுதியின் விவசாயிகளின் நண்பனாகவும் ( Farmer Friend ) அரசு நியமித்துள்ளது. மேலும் பல பரிசுகளையும், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இவருக்கு " வாழ்நாள் சாதனையாளர் " பட்டத்தையும் அளித்துள்ளது.

மேலும் தொலைபேசி வாயிலாகவும் சேவை செய்து வருகிறார்.

இவர் போன்றவர்களால் " நம்மாழ்வார் " ஐயா அவர்கள் விதைத்த விதை இன்று மரமாக மாறி அனைவருக்கும் சேவை செய்து வருகிறது.

இந்த சாதனை மனிதருக்கு " வானகத்தின் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ) " மூலம் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கரூர் மாவட்டம் குளித்தலைப் பகுதியை சேர்ந்த திரு. K.V. செந்தில் குமார் அவர்கள் வாழையை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து சாதித்துவருகிறார்.
https://www.youtube.com/watch?v=rxsrePPdlqQ