Wednesday, January 27, 2016

மாப்பிள்ளைச் சம்பா - சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள்.
‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை... இதெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும். கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம். வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா... இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும். வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும். இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.
விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. நம்ம இயற்கை விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க. உலகத்துக்கே கத்துக்கொடுத்த நாம தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.
திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் பாரம்பரிய ரகங்கள்.
இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் ஜெயராமன். வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.
படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார். பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார். வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.
அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் ஜெயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.
‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம். ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும். இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் ஜெயராமன்.

Thursday, December 17, 2015

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்
பச்சை பசுஞ்சாணம் 5 லிட்டர்
பசுமாட்டு கோமியம் 4 லிட்டர்
பசும்பால் 3 லிட்டர்
நன்கு புளித்த தயிர் 2 லிட்டர்
பசுமாட்டு நெய் அரை லிட்டர்
இளநீர் 2
வாழைப்பழம் 12
சிறிதளவு சுண்ணாம்பு
நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம்
நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ
பச்சை பசு சாணி 5 கிலோவுடன், பசு மாட்டு நெய் அரை லிட்டரை கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும். தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை, சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கலக்கி, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருவேளை காலை, மாலை பலமுறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 20 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு.
30- 50 லிட்டர் நீரில் பஞ்சகவ்யா கலவையில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நிலத்தில் தண்ணீர் பாயும் நேரமும் ஊற்ற வேண்டும்
இவற்றை 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தொழுவுரத்தில் ஊற்றி மதிப்பூட்டல் செய்து பயிருக்கு போடலாம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயிர் வளர்சி நன்றாக இருக்கும்.
இவற்றை பயிருக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் அடித்தால் பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்
பசும்சாணம் -பக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
கோமியம்(யூரின்)- பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள்
பால் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள்
தயிர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்)
நெய் – விட்டமின்-A, -விட்டமின் B, கல்சியம், கொழுப்புகள்
இளநீர் – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்)
வாழைப்பழம் நொதிப்புநிலை தரவல்லதாகும். அதிக நுண்ணூட்டம் பெறுகின்றது
பஞ்சகவ்யத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிகமிக அதிகமாகவும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடனும் உள்ளது. பஞ்சகவ்ய தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி உள்ளது தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் உள்ளது மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் உள்ளது
பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
மா
பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொறுத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும்.
முருங்கை
முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும்.
கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

அமிர்த கரைசல்

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit


இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.


பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Friday, August 28, 2015

நேந்திரம்பழ பாயசம்


தேவையானவை:
நேந்திரம்பழம்-2
வெல்லம்-250கிராம்
தேங்காய்-1
ஏக்காய்த்தூள்-1டீஸ்பூன்
முந்திரிபருப்பு-20
நெய்-தேவைக்கு

 செய்முறை:

நேந்திரம்பழத்தை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதை நெய் விட்டு மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி வதக்கவும்.
வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி கரைந்ததும் வடிகட்டவும்.
தேங்காயில் முதல்,இரண்டாம் தேங்காய்ப்பால் எடுக்கவும்.
இரண்டாம்பால் ஊற்றிசூடாக்கி நேந்திரம்பழத்துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
பழத்துண்டுகள் வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி நெய்யில் வறுத்த முந்திரி ,ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். நல்ல வாசனையுடன் பாயாசம் பக்குவம் ஆனதும் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.

குறிப்பு: சேர நாட்டில் அடிக்கடி செய்யப்படும் இந்த பாயாசத்தில் நேந்திரம் பழம் போடுவது வழக்கம்.அது கிடைக்காவிட்டால் அதற்கு பதில் நன்றாக கனிந்த ரஸ்தாளி வாழைப்பழத்திலும் செய்யலாம்.தேவைப்பட்டால் பச்சை கற்பூரம் சிறிது வாசனைக்காய் சேர்த்துகொள்ளலாம்

Monday, April 7, 2014

‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’















‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான்.

எதுக்குன்னா

 டிராக்டர்ல ஊத்து;
மோட்டார் போட்டு தண்ணி எடு;
தானியம் பெருகும்”னு சொன்னான்.

இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான்.

 எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம்.

சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது. 

நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம். 

அமெரிக்கா போக ஆசை, 

நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!

-‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ .கோ.நம்மாழ்வார்

Tuesday, February 25, 2014

இயற்கை அங்காடி - organic stores








Green Organics No: 30,
MCK Nagar, Adayalampattu,
Nolambur West,
Near 200 feet
Chennai By Pass Service Road,
Chennai – 600037 Tamilnadu – India
Phone : +91- 32925454 Mobile: +91-9444014096, 9994287060 email : organicfoodexports@gmail.com

சோழர் இயற்கை உணவு பொருள் அங்காடி
M.Chelliah,
No.27,Infant jesus church complex,
Thanjavur (Tanjore),
India 613 005
096 29 688492

Tirupur Shop
Online Organic Shop
12, SV Colony, Extension 3rd Street,
PN Road,
Tirupur - 641602
http://tirupurshop.com


விதை இயற்கை அங்காடி (Vidhai Organic Store)
a thamizhstudio network…..
இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,
காந்தி நகர்,
முதல் குறுக்கு தெரு,
அடையார், (அடையார் சிக்னல் அருகில்),
(அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).





மகா இயற்கை அங்காடி,
8, போஜகாரத் தெரு (ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்),
வாலாஜாபாத்-631605.

http://cms.vidhaiorganicstore.com/contactus_tamil.htm

 

Pasumai Organic & Naturals
26/10, Dhandeshwaram main road, 
Velacheri, Chennai - 42.
Phone: 9840 902 284,
admin@pasumaiorganic.com 
 http://pasumaiorganic.com



OTR Organic Farm Products
6,  Alagesan Main Road Number 2,
S.R.P Nagar,  Saibaba Colony,
Coimbatore- 641 011
Email: fresh@OTRFarms.com
Mobile: 97912 11979, 99946 63550, 99441 48277


DHANYAM organic superstore
No. 24, north boag road, T. Nagar, chennai - 17
Phone: 044-28157654
(organic rice, dal, cold-pressed oils, essential oils. milk, cheese, butter, ghee, vegetables, juices etc)
www.dhanyam.in

Restore
150/3,East Coast Road, Sangam Colony,
Kottivakkam,chennai,Tamil Nadu,600041
044 2492 1093
(organic groceries, fresh produce, milk products, organic clothing etc)
www.restore.org.in

Restore Organic
# 27/10, II Main Road, Kasturba Nagar, Adyar
Chennai, Tamil Nadu
094 44 166779

Bon Appétit
The Organic & Health Food Shop
2/16, Ambour Salai,
Puducherry - 605 001, India

Nalam
No: 167, Kamachiyamman Koil St,
Pondicherry, Pondicherry HO, PONDICHERRY - 605001

Green store
No 30/2 Dr Cm Complex, Behind Ganesh Temple,
Block 1st Avenue, Anna Nagar East,
Chennai - 600102

 
Naturagros
Address: 14/1-A, Vasantha Press Road,
Arunachalpuram, Adyar,
Chennai
Phone: 91 44 55850082

Magic Monkey
Address
Tirugnanasambandham Road,
Race Course,
Coimbatore – 641 018

Golden Jubilee Biotech Park For Women Society
Address: Sipcot IT Park,
Old Mahabailuram Road,
Kanchipuram - 603 103 







Wednesday, October 23, 2013

இயற்கை விவசாயம் இலவச ஆலோசனை

நண்பர்களே வணக்கம்,


இயற்கை உயிர் உரங்கள்,
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்,
விளக்கு பொறி,
இயற்கை பூச்சிகொல்லிகள்,
மலர்கள் அதிகம் பூக்க இயற்கை ஊக்கி ஆகியவை 

குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் 

வீடு தோட்டம் அமைக்க இயற்கை முறையில் விவசாயம் செய்ய அடியுரம் முதல் அறுவடை வரை இலவச ஆலோசனை வழங்கப்படும்
தொடர்புக்கு

ராஜராஜன்.நீ
+91- 7200563961
rajan.sumikutty@gmail.com

Tuesday, July 30, 2013

உப்புத் தண்ணியிலும் ஜீவாமிர்தத்தில் விளைந்த கரும்பு!

உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை...
ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு!


‘‘தண்ணி உப்பாவே இருக்கு.
இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி...
என்னத்த ஆகப்போகுது
இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..?
கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்... அதை வெகுசுலபமா சரிபண்றதோட... நல்ல விளைச்சலையும் கட்டாயம் எடுக்கலாம்’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார், கரூர் மாவட்டம், பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். இவர், சமீபத்தில் இயற்கை விவசாயச் சாதனைக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திடம் வேளாண் செம்மல் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத்தேடிச் சென்றபோது... பச்சைப்பசேலென்று ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்ற கரும்புகள், தோகைகளை ஆட்டி வரவேற்க, அவற்றோடு நின்றபடி தானும் வரவேற்ற கோபாலகிருஷ்ணன், ‘‘எனக்குச் சொந்தமா நிறைய நிலம் இருக்கு. அதுல நான் தொடர்ந்து இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கேன். போன வருஷம், என்னோட மாமனாருக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலமும் என் பொறுப்புக்கு வந்துச்சு. ஆனா, இந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல இருக்கற கிணத்துத் தண்ணி கடுமையான உப்பு. நான் சோதனை பண்ணி பாத்தப்போ, ணி.சி. 5.7 இருந்துச்சு. இருந்தாலும், இந்தத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை பண்ண முடியும்கிற நிலைமை.

மாமனார், ஏகப்பட்ட உரங்களைக் கொட்டிதான் கரும்பு, நெல், சூரியகாந்தினு விவசாயம் பாத்துகிட்டிருந்தார். ஆனா, பெரியஅளவுக்கெல்லாம் விளைச்சல் கிடைக்கல. இப்ப அதையெல்லாம் மாத்தி, இயற்கை முறை விவசாயத்தால தளதளனு கரும்பை விளைவிச்சிருக்கேன். முன்னெல்லாம் ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூலா கிடைச்சுது. இப்ப 48 டன் வரைக்கும் விளைவிச்சுருக்கேன். எல்லாம் இயற்கை வழி விவசாயத்தோட புண்ணியம்தான்.

இதைச் சாதிக்கறது பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாது. எங்கயும் அலையாம சாதாரணமா எல்லோரும் சுலபமா செய்ய முடியுற தொழில்நுட்பம்தான். ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர் சொல்ற ஜீவாமிர்தக் கரைசல்ல லேசா மாற்றம் செஞ்சு, கரும்புக்கு பயன்படுத்திப் பாத்தேன். அருமையான விளைச்சலைக் கொடுத்துடுச்சு''.
-பசுமை விகடன்
10 டிசம்பர் 2009 தேதியிட்ட
இதழிலிருந்து....

Thursday, June 6, 2013

இயற்கை விவசாயத்திற்கு பச்சை கொடி!



இயற்கை விவசாயத்திற்கு பச்சை கொடி!

ஏழு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சி பின், கர்நாடகாவில் தார்வாத் ஊரில் உள்ள வேளாண் பலகலை கழகம் (University of Agricultural Sciences, Dharwad, Karnataka) ஒரு உண்மையை கண்டு வெளியிட்டு உள்ளது

இயற்கை வழி விவசாயம் செய்ய முன்படும் போது கேட்க படும் கேள்வி “எல்லாம் சரி. இயற்கை விவசாயத்தில் இதே அளவு சாகுபடி கிடைக்குமா? வருமானம் குறையுமா?” என்பது தான்.. இந்த கேள்விக்கு கர்நாடக வேளாண் பல்கலை கழகம் 7 ஆண்டுகள் விஞான முறையாக ஆராய்ச்சி செய்து வெளியுட்டுள அறிக்கை இது தான்:

இயற்கை முறை விவசாயத்திற்கு மாறும் பொது, மிளகாய், பருத்தி, சோளம் போன்றவற்றில் முதலில் 2 ஆண்டுகள் சாகுபடி சற்று குறைந்து இருந்தது. ஆனால, அதற்கு பின், இரண்டு முறைக்கும் எந்த பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சோயா, வெங்காயம்,கடலை போன்ற பயிர்களில் இந்த முதல் இரண்டு வருட சாகுபடி குறைவும் இல்லை. உதாரணமாக கடலை சாகுபடியில் 6 ஆண்டுகாண சாகுபடியில், இயற்கை விவசாயத்தில் 2975 kg /ஹெக்டரும் ரசாயன விவசாயத்தில் 2604 kg /ஹெக்டேரும் கிடைத்தது

மேலும், இயற்கை விவசாயத்தில் ஊடு பொருட்களின் விலை குறைவு ஆதலால், லாபம் அதிகம். இயற்கை ஊடு பொருட்களால் நிலத்தில் 10-15% நீர் தேக்கும் சக்தி அதிகரிக்கிறது, இதனால் வறட்சியை இவை தாங்குகிறது
இந்த ஆராய்ச்சியின் போது இயற்கை விவசாயத்திற்கு மண்புழு உரம் கம்போஸ்ட் போன்றவை பயன் படுத்தபட்டன

இப்படி பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு அரசால் நடத்த படும் ஒரு வேளாண் பல்கலை கழகத்தில் இருந்து வெளி வந்துள்ளது நல்ல செய்தி தானே!

-Vimala Bala

♥, தமிழ் -கருத்துக்களம்-

Saturday, May 25, 2013

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?

 

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.

அர்க் எனும் அருமருந்து!

"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!

அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே!

தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324

Monday, April 29, 2013

திருவான்மியூரில் விஷமற்ற உணவுப் பொருட்கள்

நோய்களில் இருந்து நம்மை காக்க இயற்கை வழி விவசாய விலை பொருட்கள்-வழி கட்டும் இளைஞர்.

கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர் ஒருவர் மன நிறைவு கிடைக்காமல் விவசாயத்திற்கு திரும்பிய கதை. அதுவும், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போடாத விவசாயம்!! நிலங்களை பிளாட்டு போட்டு விற்கும் இக்காலத்தில் இப்படி ஒருவர். இவர் மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா எப்படி இருக்கும்!! நம்ம நாடே சொர்க்கமாயிடும். அவர் பெயர் ரூசோ. ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளியவர் இன்றைக்கு மாதம் 15 லட்சம் சம்பாதிக்கிறார், 40 பேருக்கு வேலை தருகிறார், மக்களுக்கு விஷமற்ற உணவுப் பொருட்களையும் தருகிறார்!
லட்சம் டன்களில் கொட்டப் படும் பூச்சி மருந்துகளும்,
ரசாயன உரங்களும் தான் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் பரவியிருக்கும் சர்க்கரை, கேன்சர், உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணமாகும்.
பல கொடிய நோய்கள் வருவதற்கு நாம் உண்ணும் விஷ உணவே காரணம். இவற்றுக்கு மாற்று வழி இயற்க்கை வழியில் விளைவிக்கப் பட்ட உணவுகளை வாங்கிப் பயன்படுத்துவது தான். அந்த புனித பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மாதிரி நல்ல ஆத்மாக்க்களை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம், நம்மையும் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும்.

சென்னையில் உள்ளவர்கள் திருவான்மியூரில் உள்ள இவரது கடைக்கு நேரில் சென்றோ, வீட்டு டெலிவரி கேட்டோ பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில் இவரைத் தொடர்பு கொள்ள: சுட்டி http://www.thenaturalstore.org/contact.html
இவரைப் பற்றி :-
" Raasi Eco Organic Pvt Ltd " Rousseau
1275 6th main road, thiruvalluvar nagar,
thiruvanmiyur,Chennai - 41.
Phone : 0454 - 45018540
Mobile : +91 8939915767
Email : thairuso@gmail.com

இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள்





நவீன சாகுபடி முறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் தோன்றும் முன்னேற, இந்திய விவசாயிகள் வெற்றிகரமாக சாகுபடி மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் சிலவற்றையும் கையாண்டனர். இவ்வாறான வழிமுறைகள், வரும் தலைமுறையினருக்கு, வாய்வழி வார்த்தைகளாக கொண்டு செல்லப்பட்டது.

பாரம்பரிய செயல்முறைகள் இடத்துக்கு இடம் மாறுப்பட்டாலும், அவைகளின் பூச்சி கட்டுப்பாட்டுத்திறன் ஆதாரப்பூர்வமாக்கப்பட்டு, உபயோகப்படுத்துகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டின் கன்னியாகுமாரி மாவட்டம், கோழிக்கொட்டு போதை (kozhikottu pothai) எனும் சிறு ¸¢ராமத்தில் இன்னும் பல விவசாயிகள் பூச்சி அச்சுறுத்தலை சமாளிக்க ஒரு சில பாரம்பரிய திட்டங்களை கடைப்பிடிக்கின்றனர்.

பயனுள்ள தீர்வு முறைகள்:
கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ்.அரவிந்த் கூறுகையில் இத்தயாரிப்புகள் பயிர் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை தற்காலிகமாக தடுக்க உடனடி தீர்வு அளிக்கும். மேலும் இது விவசாயிகளை கடனாளிகள் ஆவதை தடுக்கும் என்று கூறுகிறார்.

எளிய முறையில் கிடைக்கும் தயாரிப்புகள்:
“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று திரு.எஸ். அரவிந்தன் கூறினார். பப்பாளி இலையை கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து, அதை விவசாயிகள் உபயோகித்தனர். இதை தயாரிக்க சுமார் 1 கிலோ பப்பாளி இலையை தண்ணீரில் நன்கு நனைத்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் இவ்விலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கலாம். புங்கைச் சாறு நான்கு விதமாக தயாரிக்கப்படுகிறது. முதன் முறையில், புங்கையின் இலையை தலா 1 கிலோ எடுத்து ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நனைத்து வைக்க வேண்டும். பின் அதை அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்களாம். இரண்டாவது முறையில் புங்கையின் விதைகளை சுமார் 50 கிராம் எடுத்து அதை அரைத்து தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கவும். பின் அதை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க உபயோகப்படுத்தலாம். மூன்றாவது முறையில், புங்கைப் புண்ணாக்கு சுமார் 100 கிராம் எடுத்து, அதை தண்ணீரில் நனைத்து சிறு நேரம் கழித்து, அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இதே முறையில், புங்கை புண்ணாக்குடன், வேப்புண்ணாக்Ìம் கலத்து உபயோகிக்கலாம். இதில் கூடுதலாக அரை லிட்டர் கற்றாழழை சாறும், 3 லிட்டர் மாட்டின் சிறுநீர¸ம் கலக்கப்படவேண்டும். இந்த கலவையை 15 லிட்டர் தண்ணீரில் ஊறப்§À¡ட்டு ஒரு முழு இரவு வைத்து இருக்கவும். அடுத்Ð இக்கரைசலில் இருந்து 6 லிட்டர் கலவையை ±டுத்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். சில விவசாயிகள் துளசி இலைகளையும் பயிர் பூச்சி தாக்குதலுக்Ì உபயோகிக்கின்றனர். சுமார் 100 கிராம் துளசி இலை தண்ணீரில் நனைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். அடுத்த நாள் இதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்பட்டு தெளிக்கப்பட வேண்டும். இதே போல், 1 கிலோ மஞ்சளை, சுமார் 1 லிட்டர் மாட்டு சிறுநீÕடன் கலந்து ஒரு þரவு முழுவதும் வைக்கவும், பின் மஞ்சளை எடுத்து அவற்றை நன்கு அரைத்து, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
இப்புங்கை சாறுத் தயாரிப்புப் போல வேம்புச் சாறும் மூன்று வகையில் தயாரிக்கலாம்.
முதல் வகையில், சுமார் 6 கிலோ வேம்பு இலையை தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதை நன்கு அரைத்து, 60 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
இரண்டாவது வகையில், சுமார் 3 கிலோ வேம்பு விதைகளை தண்ணீரில் நனைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து அதை அரைத்து கூழாக்கி பின் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மூன்றாவது வகையில், சுமார் 6 கிலா வேப்பபுண்ணாக்கினை நன்கு அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து, அதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
மேலும், சில விவசாயிகள் பொதுவான இலைச்சாறு ஒன்றையும் உபயோகிக்கின்றனர். அது “மூன்று இலைக்கரைசல்” எனப்படும். இக்கரைசல் தயாரிக்க சுமார் 3 கிலோ எருக்கு, வேம்பு மற்றும் நொச்சி இம்மூன்றையும் சுமார் 3 லிட்டர் மாட்டு சிறுநீரில் நனைத்து 2 லிட்டர் தண்ணீரில் ஊறவிடவேண்டும். இதை ஒரு இரவு முழுவதும் வைத்து, பின் இதை வடிகட்டி, மீண்டும் 60 லிட்டர் தண்ணீர் கலந்து, உபயோகிக்கலாம். வழக்கமாக கரைச்சலை வடிகட்ட தூய பருத்தித் துணியை பயன்படுத்தவேண்டும். மேலும் இதனுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 4 கிராம் காதி சோப் கரைசலை சேர்த்து, தெளிக்கலாம்

வளமையான அறிவு:
இக்கரைசல்கள் அனைத்தும் வெற்றிகரமானதாக இருப்பினும், இவை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதை இதை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் நினைவு கூறவேண்டும். மேலும் இதன் உபயோகம் என்பது, பாரம்பரிய அறிவனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும், பகுதிக்கும், பூச்சிக்கும் மாறுபடும்.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இலை சாறுகளும் கதிர் நாவாய் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், இலைப்பேன், அஸ்வினி போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக திரு.அரவிந்தன் கூறுகிறார்.

தொடர்புக்கு: திரு.எஸ்.அரவிந்தன்,
சமூக விஞ்ஞானி, விவேகானந்தா இவற்றை வேளாண் மேம்பாட்டு திட்ட நிலையம், நார்தீப், விவேகானந்தபுரம்,
கன்யாகுமரி - 629 702
தமிழ்நாடு இந்தியா
மின்னஞ்சல் ngc_vknardep@sancharnet.in மற்றும் ஒரு முகவரி
அலைபேசி: 9443748714
தொலைபேசி: 04652 - 247126, 04652 - 246296

சிறிய யோசனை பெரிய பலன் !



தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூகா கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்த பாலசுப்ரமணியன் காலை வேளையன்றில் தேடிச்சென்று சந்தித்தபோது வரப்பில் அமர்ந்தபடியே பேச ஆரம்பித்தார். பாலசுப்ரமணியன். “2 ஏக்கர்ல கரும்பும் 6 ஏக்கர்ல நெல்லும் சாகுபடி செய்து கொண்டு இருக்கேன். இதெல்லாம் தனியா இருக்குற ஒரு ஏக்கர்ல உளுந்து சோளம் போட்டடு இருக்கேன். தோட்டத்தோட வேலி ஒரத்துல நாட்டுத்தேக்கு, வேங்கை மரங்களைக் கலந்து நட்டு வைத்து இருக்கேன். இரண்டும் சேர்த்து மொத்தம் 70 மரங்கள் இருக்கு.

தோட்டத்துக்கு நாலு பக்க ஓரமுமே மேடா இருக்கு. நடுப்பகுதி பள்ளமா இருக்கு. அதனால, வேலி ஓர மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுறது ரொம்ப சிரமமா இருந்தது. அதில்லாம இப்போ இருக்கிற கரன்ட் பிரச்சனையில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல மரங்களுக்கு எப்படி பாய்ச்சுறது. ஆனா, இந்த கரன்ட் பிரச்சனையெல்லாம் வர்றதுக்கு முன்னயே தனித் தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்தில், மண்பானையில சின்ன ஓட்டை போட்டு மரத்துக்குப் பக்கத்தில் வைத்து தண்ணீர் நிரப்பி இருந்தேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சொட்டிட்டே இருக்கும். அதுல என்ன பிரச்சனைன்னா, அடிக்கடி பானையில இருக்குற ஓட்டயில் மண் அடைச்சுக்கும். அதைச் சரி பண்றது பெரிய வேலையாயிடுச்சு.

இதுக்கு மாற்றா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தப்போ, குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தாங்க. அதுல சொட்டு சொட்டா குளுக்கோஸ் தண்ணீர் விழுந்துக்கிட்டிருந்துச்சு, அதைப் பார்த்ததும் எனக்கு பொறி தட்டிடுச்சு. அந்த பாட்டிலையும் டியூபையும் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச முடியுமானு யோசிச்சு செய்து பார்த்தேன். அது சரியா அமைஞ்சுடுச்சு. அடிப்பாகம் அகற்றப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் கவிழ்த்து, கட்டித் தொங்கவிட்டு, அதில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் குழாய்களைச் செருகி வைத்திருந்தார். பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர், குழாய்கள் மூலமாக சொட்டிக் கொண்டிருந்தது.

தொடர்ந்தவர், “குளுக்கோஸ் ஏத்தின பிறகு அந்த பாட்டில்களை சும்மாதான் போட்டு வைத்து இருப்பாங்க அதனால இந்த டியூப்கள் இலவசமாகவே கிடைக்கும், ஆனா, குளுக்கோஸ் பாட்டில்களோட கொள்ளளவு குறைந்தளவு அந்த பாட்டில் நமக்குப் பயன்படாது. அந்த டியூப் மட்டும் தான் பயன்படும் 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கூல்டிரிங்க்ஸ் பாட்டில், வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்திக்கலாம். பாட்டில்களோட அடிப்பாகத்தை நீக்கிடணும். டியூபை நல்லா சுத்தமா கழுவி பாட்டிலோட மூடிப்பகுதிக்கு அருகில் இணைக்கணும். இந்த டியூப்ல தண்ணீர்யோட அளவைக் கட்டுப்படுத்தறதுக்கு உருளை மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும். அது மூலமா ஒரு நிமிஷத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விழுகுற மாதிரி அமைச்சுக்கிட்டா போதும் சொட்டுநீர்ச் சாதனம் தயார்.

கொஞ்சம் வளர்ந்த மரம்னா, அதோட கிளையிலேயே கம்பி மூலமா இந்த பாட்டிலைக் கட்டித் தொங்க விட்டுடலாம். நாம எளிதா தண்ணீர் நிரப்புற உயரத்துல தொங்க விட்டுக்கணும். சின்னக் கன்றுகளா இருந்தா பக்கத்துல ஒரு குச்சியை நட்டு, அதுல கட்டித் தொங்க விடலாம். காத்துல ஆடாம இருக்கற மாதிரி டியூபையும் மரத்தோட அடிப்பாகத்துல கட்டிடணும். கட்டும்போது டியூப் நசுங்கிடக் கூடாது. மரங்கள் பெருசான பிறகு, பெரிய கேன்களைத் தொங்க விட்டுக்கலாம். ஒரு தடவை தண்ணீர் நிரப்பிட்டா இரண்டு நாளைக்கு சொட்டிக்கிட்டே இருக்கும். அதனால இரண்டு நாளைக்கு ஒரு தடவை பாட்டில்கள நிரப்பினா போதும். இந்த மாதிரி தண்ணீர் விடுறப்போ சீரான இடைவெளியில் தண்ணீர் கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதனால வேருக்குத் தேவையான ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும். களைகளும் மண்டாது. 70 மரத்துலயும் இப்படி பாட்டில்களைக் கட்டி வைத்து இருக்கேன். அதை நிரப்புறத்துக்கு எனக்கு ஒரு மணி நேரம் தான் ஆகுது. அதோட கரன்ட் பிரச்சனை பத்திக் கவலையில்லை. எனக்கும் உடற்பயிற்சி மாதிரி அமைஞ்சுடுது .

தொடர்புக்கு
பாலசுப்ரமணியன்
திருவிடைமருதூர் தாலூகா
கோவிந்தபுரம் கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
செல்போன் 9965674223

Sunday, April 28, 2013

மணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் இயந்திரம்



இரு தமிழர்களின் சாதனை !

ஒரு மணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு ...


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காதர், ஜமால் ஆகிய இளைஞர்கள் ஒரு மணி நேரத்தில் 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதிசயம் - ஆனால் உண்மை.

சிவகங்கை மாவட்டம், கீலவெல் லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் (32). இவர் எம்.பி.ஏ மற்றும் எம்எஸ் (அய்டி) படித்தவர். அமெரிக்காவில் கடந்த 13 ஆண்டுகளாக தனியார் அய்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எண்ணெய் ஆலைகளுக்கு தேங்காய் விநியோகம் செய்வது, இவரது குடும்ப தொழிலாக இருந்து வருகிறது. தேங்காய் உரிக்க போது மான ஆட்கள் இல்லாததால், ஆலை களுக்கு போதுமான தேங்காய்களை விநியோகம் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில், புதிய கருவியை கண்டு பிடிக்க காதர் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். பின்னர், அவருடன் சேர்ந்து 4 பேர் கொண்ட குழு, இந்த கருவியை வடிவமைத்துள்ளது.

ஆலைகளுக்கு தேங்காய் சப்ளை செய்வது, எங்களின் குடும்ப தொழி லாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. தற்போது, ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களின் தொழில் பெரிதும் பாதிக் கப்படுகிறது. எங்களை போல் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலைகள் கேட்கும் அளவுக்கு உடனடியாக தேங்காய் களை உரித்து அனுப்ப முடியவில்லை. இதற்காக, புதிய கருவியை கண்டுபிடிக்க வேண் டுமென திட்டமிட்டு இருந்தேன்.

அப்போதுதான், இணையதளம் மூலம் நாமக்கல் மாவட் டத்தில் பட்டறை நடத்தி வரும் ஜெகன் என்பவரின் நட்பு கிடைத்தது. பயனுள்ள தொழில்நுட்பங்கள் பற்றி அடிக்கடி இணையதளம் மூலம் பேசுவோம். 3 மாதங்களாக புதிய கருவி கண்டுபிடிப்பு பற்றி ஆலோ சனை நடத்தினோம். ஜெகன், ஜமால், ஷேக், சேட் ஆகிய 4 பேருடன் நானும் சேர்ந்து, இந்த புதிய கருவியை 2 மாதத்தில் வடிவமைத்தோம். இதற்காக, மொத்தம் ரூ.8 லட்சம் செல விட்டுள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு 2,000 முதல் 2,500 தேங்காய்களை உரிக்க முடியும். பயிற்சி பெற்ற தொழி லாளி ஒரு மணி நேரத்துக்கு 200 தேங்காய் மட்டுமே உரிக்க முடியும்.

தற்போது 1,000 தேங்காய் உரிக்கும்போது 5 தேங்காய் உடைகிறது. தேங்காய் உடைவதை தடுக்க சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள் ளோம். மேலும், நமக்கு தேவையான போது, குடுமியுடனும் தேங்காய் உரிக்க முடியும். இந்த புதிய இயந்திரத்தை இயக்கவும், கண் காணிக்கவும் ஒரு தொழிலாளர் மட்டுமே போதுமானது. எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி தேங்காய் தர முடியும். தேங்காய் ஏற்றுமதி பாதிக்காது. தேங்காய் நார் உற்பத்தியும் எளிமையாகி விடும். இதைத்தொடர்ந்து, தேய்காய் கழிவுகளை கொண்டு பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

via இன்று ஒரு தகவல்

Thursday, April 18, 2013

நோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம்



நன்றி : புதிய தலைமுறை

நோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம் பூ. சர்பனா தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம்சிவகாசியில் இயங்கி வருகிறது சிவகாசி தலைமை தபால் நிலையத்தை தாண்டிச் சென்றபோது கண்ணில் பட்டது, தாய்வழி இயற்கை உணவகம்!


இங்கே மாறன்ஜி என்பவர், கடந்த 6 வருடங்களாக
முளைகட்டிய தானியங்கள்,
கற்றாழைப்பாயசம்,
நெறிஞ்சிமுள் சாறு,
 துளசி டீ

போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித
நோய்களுக்கான உணவுகளைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில்
கொடுத்து வருகிறார். சுகாதாரமாக இருப்பதாலும் நோய்கள் குணமாவதாலும்
எந்நேரமும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சிவகாசி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் இந்த இயற்கை
உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டுச் செல்கிறார்கள்.மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு.

எனக்கு சொந்த ஊரு சிவகாசிதான். பிளாஸ்டிக் கம்பெனி வச்சு, நல்ல லாபம் பார்த்துக்கிட்டு இருந்த நான், நோய்களுக்கேற்ற இயற்கை உணவகத்தை நடத்த முக்கியக் காரணம் என்னோட அம்மா சந்திராதான். சில வருஷத்துக்கு முன்னாடி, அம்மாவுக்கு கடுமையான மூட்டுவலி இருந்துச்சி.

ஹாஸ்பிட்டல்ல காட்டுனப்ப, ஆபரேஷன் பண்ணாத்தான் சரிப்படுத்த முடியும்னு டாக்டருங்க சொன்னதால, ஆபரேஷன் பண்ண அட்வான்சா ஒரு மாசத்துக்கு முன்னாடியே 25 ஆயிரம் ரூபாய் கட்டிட்டோம்.இடைப்பட்ட
நாளுல தெரிஞ்சவங்க சிலர், முடக்கத்தான் தழையைப் பறிச்சு அம்மாவுக்கு ரசம் வச்சுக் கொடுத்தா வலி குறையும்னு சொன்னாங்க. அவங்க சொல்படியே ஆபரேஷன் நாள் வர்ற வரைக்கும் முடக்கத்தான் ரசம் வச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு மாசத்துலேயே அம்மாவுக்கு மூட்டுவலி சுத்தமா போயிடுச்சு. முழுமையா குணமானதால, நாங்க ஆபரேஷனுக்குப் போகல.

அதுக்காகக் கட்டுன பணம் தான் வேஸ்டா போச்சு. அப்போதான் பாரம்பரியமிக்க இயற்கை உணவுகளை சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நோய்களை அண்டவிடாம மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

மூலிகைகளின் மகிமையை உணர்ந்ததால, மருத்துவ உணவகத்தை நாமே ஏன் ஆரம்பிக்கக்கூடாதுன்னு யோசனை வந்துச்சு. அதோட விளைவுதான் கடந்த 6 வருஷமா நோய்களுக்கான இயற்கை உணவகத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வர்றேன். இதுக்காக ஒரு வருஷம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகக்கலை அறிவியல் படிச்சது மட்டுமில்லாம, சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்கள்ல வசிக்கும் பாட்டிகளிடம் போய்க் கேட்டு இயற்கை தாவரங்களில் உள்ள மருத்துவக் குணம் என்னென்ன என்பதையும் ஆராய்ச்சி பண்ணினேன். ஆரம்பத்துல

துளசி டீ,
நிலவேம்புக் கஷாயம்,
டயாபட்டிக் கண்ட்ரோல் ஜூஸ்,
கறிவேப்பிலைக் கீர்

போன்றவற்றை மட்டும் செஞ்சு, மொபட்ல எடுத்துக்கிட்டுப் போய் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தேன். அன்று தன்னம்பிக்கையோடு கஷ்டப்பட்டது வீணாகல. இன்னிக்கு
என்னோட ஹோட்டலுக்கு ஒரு நாளைக்கு 450 பேருக்கும் மேல நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்" என்கிறார் மாறன்ஜி.

வங்கியில இருந்து 75 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கித்தான் இந்த ஹோட்டலை தொடங்கி இருக்கிறார் இவர். நாள் ஒன்றுக்கு வேலையாள் கூலிபோக ஹோட்டல் மூலமா 5,000 ரூபாய் வரைக்கும் லாபம் வருவதாகத்
தெரிவிக்கிறார்.

எள்ளு,
கொள்ளு,
கேழ்வரகு,
வரகு,
தினை,
கம்பு,
பயறு  வகைகள்,
கோதுமை போன்ற தானியங்களையும்
கற்றாழை,
நெருஞ்சி முள்,
கீழாநெல்லி போன்ற 20 வகையான
மூலிகைத் தாவரங்களையும்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்தும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்யும் இயற்கை விவசாயிகளிடமிருந்து மட்டுமே தேவையானவற்றை நேரடியாகப் போய் வாங்கி வருகிறாராம்.

மேலும் பலருக்கு மாடிவீட்டு மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களிடமிருந்தும் மூலிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்.

உடம்பு இளைக்க
அருகம்புல் சாறு,
மலச்சிக்கல் மற்றும்
மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு,
முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர்,
சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு,
ஞாபக சக்திக்கு வல்லாரை சூப்,
ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு,
நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள்
போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரையும்
பிற்பகல் 3 மணிக்கு மேல்
முளைகட்டிய பயறு மற்றும்
சுண்டல் வகைகள்,
சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,
நெல்லிக்காய் ரசம்,
 மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம்,
ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி,
இருமலை போக்க துளசி டீ
என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரித்து வருவது இந்த
உணவகத்தின் சிறப்பு.

இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் பெற்றுள்ளது, மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

தொடர்புக்கு: மாறன்ஜி 93674 21787
By: Maran G Sivakasi

Wednesday, April 17, 2013

மரங்களுக்கு குளிர்ச்சி படுக்கை






மரங்களுக்கு குளிர்ச்சி படுக்கை போட்டுட்டேன்... மரங்கள் ஹாப்பி யா குளு குளுன்னு இருக்கு... நமக்கு தான் வெயில் தாங்க முடியலை ...:(

இப்படி போடும்போது ஒரு முறை தண்ணி கொடுத்தா 20 நாள் தண்ணீர் மரத்துக்கு கிடைக்கும்...
இதற்கு எரு உரம் அடியில் போடப்பட்டுள்ளது நட்பே ...



பல்லுயிரியம் (Bio diversity)


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity). இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருந்தாக வேண்டும்.

ஆனால்...

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக அனைத்தையும் கண்டபடி அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என இன்னும் பல தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை...
 — with Sivasankar Mani.

Thanks மரம் ( Tree ) Facebook

Tuesday, March 26, 2013

மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி

விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்''


'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!





''ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது... எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். 'உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா?' என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், 'இந்த மண்ணை மாற்ற முடியும்... இங்கே வாழ முடியும்' என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள்.

அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டதற்கான பலனாக... இன்று நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மாம்பழம் என்று விளைந்து செழித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். மாட்டுச்சாணம், அதன் சிறுநீர் இவைதான் எங்கள் பயிர்களுக்கான டானிக். இதற்காகவே நாலஞ்சு பசுமாடுகளை வளர்க்குறோம்''

- நம் கண்களுக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியபடி பேசுகிறார் விவேக்.

விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்புச் சக்கரத்தை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வெற்றிக் கதையைக் கேட்டால்... 'அம்மாடியோவ்' என்று ஆச்சர்யத்தின் விளிம்புக்குச் செல்லாமல் இருக்க முடியாது உங்களால்!

மௌனம் பேசியதே...!

பொருளாதாரம் படித்தவர் விவேக். சமூகவியல் படித்தவர் ஜூலி. காதலால் கட்டுண்டு திருமணம் புரிந்த இத்தம்பதி, நவநாகரிக டெல்லியில் வாழ்க்கையை ஓட்டத் துவங்கியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கை நகர மறுத்துவிட்டது. ஆம், புகை கக்கும் கார்கள், மரணத்துக்குத் தோரணம் கட்டும் 'துரித உணவு', சக மனிதன் மேல் பற்றில்லாத சூழல் என்று நரகத்தனமாகிவிட்ட நகர நாகரிகம் இவர்களை ரொம்பவே உரசிப் பார்க்க... மௌனம் உரக்க பேசும் வனம் நோக்கி பயணப் பட்டிருக்கிறார்கள். இறுதியாக இவர்கள் வந்து சேர்ந்த இடம்... கர்நாடக மாநிலம் நுகூ (ழிuரீu) அணையை ஒட்டிய ஹல்சூர். 'இனி, இயற்கை விவசாயம்தான் வாழ்க்கை' என்று மண்ணின் மீது சத்தியம் செய்துவிட்டு, கையில் தூக்கிய மண்வெட்டி... இன்று வரை இயங்கிக் கொண்டே இருக்க... வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கிறது.

'ஆற்று நிறைய தண்ணீர் இருந்தாலும், அள்ளிதான் குடிக்க வேண்டும்!'

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் எனும் சிறுநகரிலிருந்து ஐம்பத்தி இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹல்சூர். இங்கு நுகூ அணையைத் தொட்டபடி சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மா, தென்னை என்று முப்பது வகையான பயிர்களை கடுகளவு ரசாயனம் கூட பட்டுவிடாமல் பக்குவமாக சாகுபடி செய்து கொண்டிருக்கிறது, விவேக்-ஜூலி தம்பதி.



அணையிலிருந்து வெள்ளம் போல நீர் ஓடி வந்தாலும், பாதிப் பயிர்களுக்கு சொட்டுநீர் மீதிப் பயிர்களுக்கு தெளிப்புநீர் என்று தண்ணீரை சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். கோடையில் நீர்வரத்து குறைந்து விடுவதோடு, மின்வெட்டும் அடிக்கடி வந்து சேர்ந்து படுத்தி எடுத்துவிடும் பகுதி இது. அதனால், கிடைக்கும் நான்கைந்து மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தியே.... அத்தனை பயிர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் நீர் பாய்ச்சி விடுவார்களாம்.

விளை பொருளெல்லாம் விலை பொருளாக...!

விளைவிக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பதுதான் இவர்களின் வெற்றிப்பாட்டை!

மாங்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்கள் ஊறுகாய்களாக மாறுகின்றன; கரும்பு, ஆலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வெல்லமாக மாறுகிறது; நெல், இங்கேயே அரிசியாகி கடைகளுக்குச் செல்கிறது. பால், பால்கோவாவாக... பாலாடைக் கட்டியாக மாறுகிறது; தேங்காய், எண்ணெயாக வடிவெடுக்கிறது!

''இப்படி எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்வதால், எங்கள் உழைப்பு கொஞ்சமும் வீணாகாமல் வருமானமாக திரும்பி வந்து கொண்டே இருக்கிறது.

நெல்லை அப்படியே விற்றால், கிலோவுக்கு பன்னிரண்டு ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அரிசியாக விற்கும்போது கிலோ நாற்பது ரூபாய்.

சூரியகாந்தி விதை ஒரு கிலோ 25 ரூபாய். எண்ணெயாக விற்கும்போது ஒரு லிட்டர் அறுபத்தைந்து ரூபாய்.

ராகியின் விலை கிலோ 16 ரூபாய். மால்ட் தயாரித்து விற்றால், கிலோ அறுபத்தைந்து ரூபாய்.

கரும்பு கிலோ 2 ரூபாய். வெல்லமாக மாற்றும்போது கிலோ நாற்பது ரூபாய்.

பால் ஒரு லிட்டர் இருபது ரூபாய். பாலாடைக் கட்டியாக (சீஸ்) விற்கும்போது கிலோ ஆயிரம் ரூபாய்.

எலுமிச்சை, நெல்லி, கேரட், பீட்ரூட் என அனைத்தும் ஊறுகாய், ஜாம் என்று பல வடிவங்களாக உருமாறுகின்றன.

இயற்கை முறையில் விளைந்த பருத்தியை நூலாக்கி, வீட்டிலேயே இயற்கை சாயம் கொடுத்து விற்பனை செய்கிறோம். இந்தச் சாயத்தையும் பழங்கள் மற்றும்காய்கறிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக... மாதுளம் பழத்தின் மேற்புறத் தோலில் இருந்து மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சாயங்களை உருவாக்குகிறோம். இயற்கைப் பருத்தி மற்றும் இயற்கைச் சாயத்துடன் உருவாகும் எங்களின் நூலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நம்முடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதலாக 30% முதல் 40% வரை லாபம் பார்க்க முடியும்'' என்று மகிழ்ச்சி பொங்கிய விவேக், தொடர்ந்தார்.

அரசையே அசரவைத்த இயற்கை..!

''ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் உடலுக்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறதோ... அதே அளவுக்கான கேடு, நாம் உடுத்தும் துணியிலும் இருக்கிறது. ஒரு வெள்ளைச் சட்டைக்கு குறைந்தது நூற்றி ஐம்பது கிராம் ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது (சட்டையைத் தயாரிக்கத் தேவையான பஞ்சை உற்பத்தி செய்வதற்கு). இதிலிருந்து, பருத்தி விவசாயம் எந்தளவுக்கு ரசாயனத்தால் சீரழிந்து கிடக்கிறது என யோசித்துப் பாருங்கள்?'' என்று சமூக அக்கறையோடு கேட்ட விவேக், கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றைம்பது விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'இயற்கை விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை ஏற்படுத்தி, அவர்களையும் இயற்கைப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.



''எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தைப் பார்த்த பின், இந்தப் பகுதி விவசாயிகள் தாங்களாகவே எங்களிடம் வந்து, 'இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தரச் சொன்னார்கள். இதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் மூலமாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி, ரசாயனக் கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, கர்நாடக அரசின் கவனத்தையும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் புரிந்துகொண்ட கர்நாடக மாநில அரசு, நூறு கோடி ரூபாயை இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படவிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் முழுமையும் இயற்கை விவசாய பூமியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு'' என்று சிரிக்கும் விவேக்,

''இந்த நாற்பத்தைந்து ஏக்கரும் இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறந்து, பலருக்கும் வழிகாட்டியாக மாறியதில், என் மனைவியின் உழைப்பும் அளவிட முடியாதது'' என்றபடியே ஜூலியை நோக்கி கை நீட்டினார்.

களை பறித்தல் முதல் காளை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்யும் ஜூலி, விதவிதமான மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டிருப்பதுடன், மூலிகை வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

''தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.

விவசாயம் ஒரு தொழில் இல்லை. வாழ்க்கை, கலாச்சாரம் எல்லாமும் அதுதான். இதை ஏன் புரிந்துகொள்ள நாம் மறுக்கவேண்டும். அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, மரபணு மாற்று விதை ஆராய்ச்சிக்கு இடம் கொடுப்பது வரை அனைத்துவித தவறான செயல்களுக்கும் தமிழகம் துணைபோவது... இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்தான். இரண்டு ஏக்கர் பூமி இருந்தாலே இன்று ராஜா மாதிரி வாழலாம். இயற்கை முறையில் விவசாயத்தை செய்யும்போது நீங்கள் ராஜாவுக்கே ராஜாதான். பூச்சி, நோய் என்று எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பாதித்தாலும் அதை நோயாகப் பாக்காதீர்கள். பயிர் தன்னுடைய வலுவை கொஞ்சம் இழந்துவிட்டதாக நினைத்து, அதற்கு வலுவை ஊட்டுங்கள். அதற்காகத்தான் இருக்கிறது. பசுஞ்சாணம். அதற்கு நிகரான பூச்சிக் கொல்லி எதுவுமில்லை. அதை வைத்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரித்துப் பயன்படுத்தலாம்'' என்று ஒரு விரிவுரையாளராக பேசிய ஜூலி,

''பருத்தியில் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க அதற்கு நடுவில் வெண்டைச் செடியை சிறிய அளவுல பயிரிட்டாலே போதும். பருத்தியைத் தாக்க நினைக்கும் பூச்சிகள் வெண்டையைச் சூழ்ந்துகொண்டுவிடும். அதை எளிதாக நாம் அகற்றிவிடமுடியும்'' என்று போகிறபோக்கில் ஒரு தொழில்நுட்பத்தையும் சொல்லிவிட்டு,

''இங்கே விளையும் பொருட்களில் 20% எங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. 70% விற்பனைக்குப் போகிறது. மீதி 10% யானை, காட்டெருமை, பன்றி, பறவைகள் என்று வனவிலங்குகளுக்காக விட்டு விடுகிறோம். ஏன் என்றால்... இது விலங்குகளின் பூமி. நாம்தான் இங்கே வந்து ஆக்கிரமித்துக் குடியிருக்கிறோம். அதனால், அவர்களுடைய பங்கினை கொடுக்க வேண்டாமா?'' என்று உயிர் தர்மம் பேசி வியக்க வைத்தார்!

விளைவிப்பதோடு நின்றுவிடாமல், (விலை) மதிப்பையும் கூட்டும்போதுதான்... பெருவெற்றி என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் உதாரணத் தம்பதியை வியந்தபடியே விடைபெற்றோம்!

பேர் சொல்லும் பிள்ளைகள்!

விவேக்-ஜூலி தம்பதிக்கு கபீர், ஆஸாத் என்று இரண்டு மகன்கள். இருவரின் பள்ளிக்கூடமே... அவர்களுடைய நாற்பத்தைந்து ஏக்கர் தோட்டம்தான். ஆம், அடிப்படை எழுத்துக்களையும், சில பல வார்த்தைகளையும் தெரிந்து கொள்வதற்காக தொடக்கப் பள்ளி வரை சென்றதோடு சரி, மற்றதெல்லாமே வீட்டிலும் தோட்டத்திலும்தான். அதிகாலையில் எழுபவர்களுக்கு வயல் வேலையோடு பல துறை பற்றிய அறிவையும் கொடுக்கிறார்கள் அப்பா-அம்மா இருவரும். இப்போது கல்லூரி வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கபீர்-ஆஸாத் இருவருக்குமே கோழித்தீவன தயாரிப்பு துவங்கி இன்டர்-நெட் வரை அத்தனையும் அத்துப்படி. இந்த இருவரும் சேர்ந்தே நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்துக்கும் வேலியை உருவாக்கி இருக்கிறார்கள். டிராக்டரை கழற்றி மாட்டுகிறார்கள். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானை, காட்டுப்பன்றிகளை விரட்ட காவல் இருக்கிறார்கள்.

Thanks Vikadan

Friday, March 22, 2013

சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்

லாபம் தரும் சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்-புதிய தொழில் வாய்ப்பு


கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும்.

கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது.

தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.

சாமை
ஒரு எக்டரில் சுமார் 1030 கிலோ என்ற அளவுக்கு மகசூலை சாமை பயிரில் பெறலாம். இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.

வரகு
வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த காலத்தில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறினர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர். இதன் விதைகள் நீண்ட கால சேமிப்பிற்கு பிறகும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழையைக் கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.
உடல் புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் ஆற்றலும் வரகுக்கு உண்டு.

பனிவரகு
இந்த பயிர் மிககுறுகிய வயதுடையது. மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் பெறுவதற்கான ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது.
சரியான பருவத்தில் விதைக்கும் போது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்த பயிரை தாக்குவதில்லை. பனிவரகில் இருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, புட்டு, முருக்கு, பக்கோடா, சேலட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.
சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.

குதிரைவாலி
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. வளமற்ற நிலங்கள் கொண்ட வறுமையான விவசாயிகளும் இதனை பயிரிடலாம். இந்த பயிர் மாட்டுத்தீவனமாகவும், மக்காச்சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.

இந்த தானியங்களை பயன்படுத்தி புதிய புதிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.தகவல்: ப.சங்கரலிங்கம், வேளாண்மை இணைஇயக்குநர் மற்றும் கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), மதுரை


https://www.facebook.com/vergalaithedi